அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரதப் பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்
அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார். நேற்று (13) இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த புகையிரதப் பாதையில் முதலாவது கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை, இரண்டாம் கட்டமாக இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையும், மூன்றாம் கட்டமாக எம்பிலிபிட்டிய, சூரியவெவ, மத்தளை ஊடாக […]