செய்திகள் விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வு – இந்திய தேசியக் கொடி தவறவிடப்பட்டதா?

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு லாகூரில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஏழு நாட்டு அணிகளின் கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது, இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படவில்லை என்று ஒரு ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுளு்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி நிகழ்வை […]

உலகம் செய்திகள்

தலைப்பாகைகள் அகற்றம் – அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களின் தலைப்பாகைகளை அகற்ற அமெரிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை (பெப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த விமானத்தில் இந்தியா வந்த சீக்கியர்களை அமெரிக்க […]

உலகம் செய்திகள்

ஒரே ஒரு நிபந்தனை; காசா ஆட்சியை ஒப்படைக்க ஹமாஸ் தயார்

போருக்குப் பிறகு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் அழுத்தத்தின் கீழ் ஹமாஸ் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்கை நியூஸ் அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், காசாவில் அதிகார பரிமாற்றத்திற்கு ஹமாஸ் ஒரே ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கெய்ரோவிற்கு விஜயம் செய்த ஹமாஸ் குழு மீது எகிப்து அழுத்தம் கொடுத்துள்ளது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தங்களின் கீழ், பாலஸ்தீனிய ஆணையம் மேற்குக் கரையின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி புதிய திட்டம்

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்னவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. பண்டாரவளை, தியதலாவை, ஹப்புத்தளை, ஹாலி எல, எல்ல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உமா ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் […]

செய்திகள் விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலை இந்திய போட்டிகள் மற்றும் அரையிறுதி ஒன்றுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது. “சம்பியன்ஸ் கிண்ண டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை 2023ஆம் ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய… “கல்வி சீர்திருத்தத்தில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார். Next article: இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான […]