சினிமா செய்திகள்

‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?

கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப் படம் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என […]

உலகம் செய்திகள்

பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா

மனிதாபிமான உதவி, எதிர்கால மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு அமைதி செயன்முறைக்கான துணை சிறப்பு ஒருங்கிணைப்பாளர், குடியுரிமை மற்றும் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் முஹன்னத் ஹாடி தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆதரிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குடியிருப்புகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புத் தேவைகளில் இந்தது றை மிகப்பெரிய பங்கை வகிக்கும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம், 2028 ஆம் ஆண்டளவில் கடன் திருப்பிச் செலுத்தும் சாத்தியம் எதிர்பார்க்கப்படுகிறது. – 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சூழ்நிலையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை […]

உலகம் செய்திகள்

போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா – வத்திக்கான் தகவல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸ் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட மார்பு சிடி ஸ்கேன் சோதனையில், இருதரப்பு நிமோனியாவின் தொடக்கத்தைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் மருந்து சிகிச்சை தேவைப்பட்டது,” […]

உலகம் செய்திகள்

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை மேலும் சிக்கலாகிவிட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 88 வயதான போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போப் பிரான்சிஸின் தற்போதைய உடல்நிலை காரணமாக,நோய் நிலைமை மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் செய்திகள்

அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த டிரம்ப் உத்தரவு

பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக, ஜனவரி 20இல் டிரம்ப் பொறுப்பேற்றார். அவரது அரசில், ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தின்தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையில் பணித் திறன் துறை அமைக்கப்பட்டுள்ளன. இந்த துறை, அரசின் செலவினத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்கள், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுத்தமான இலங்கை” திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு கருத்தரங்கு

“சுத்தமான இலங்கை” திட்டத்தை முறையாக செயல்படுத்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸின் தெரிவுசெய்யப்பட்ட 150 உறுப்பினர்களைப் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்கான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 18) பனாகொடை இலங்கை இலகுரக காலாட்படை படைப்பிரிவு வளாகத்தில் ஆரம்பமாகியது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) வரவேற்பு உரையை நிகழ்த்தி, பங்கேற்ற அனைத்து அதிகாரிகளையும் கருத்தரங்கிற்கு வரவேற்றார். பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில், பொதுமக்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், அரசு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடளாவிய கப்ருக சமூக வலுவூட்டல் திட்டம் இன்று கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகிறது

தெங்கு பயிர்ச் செய்கையில் தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்ளும்; தேசிய தேவைக்கு ஏற்ப, நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை 9.00 மணிக்கு படுவத்த, நாரங்கொடபாலுவவில் உள்ள ரத்ன ஸ்ரீ கனராம பொத்குல் விகாரையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த திட்டத்துடன் இணைந்து தென்னை உற்பத்தி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது. பிரதமர் ஹரிணி அமரசூரிய முல்லைத்தீவில் தெரிவிப்பு

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல்

வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதனால் வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத் தோட்டச் செய்கை போன்ற செயற்பாடுகளுக்காக நீரை பயன்படுத்துவதை குறைத்து அத்தியாவசியமான அன்றாட செயற்பாடுகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.