உள்ளூர் செய்திகள் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. இதன் விளைவாக, அவரது உடல் கொழும்பு பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது, குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் பிரபல பாதாள கும்பல் தலைவர் நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அக்குரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து கவனம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அண்மையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 2025 இல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள, பழைய நெல் வயல்களைப் பயிரிடுதல், நீர்ப்பாசன கால்வாய்களைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான பல விசேட திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மாத்தறையின் அகுரெஸ்ஸ நகரத்திலிருந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாஸ்போர்ட் அலுவலகம் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதனால் வரிசைகளில் அவதானிக்கத்தக்க வீழ்ச்சி

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் தீவிரமடைந்து காணப்பட்ட நீண்டகால வெளிநாட்டுப் பாஸ்போர்ட் (பயணக் கடவுச்சீட்டுகளைப்) பெற்றுக்கொள்வதற்கான தாமதம் ஏற்பட்டமைக்கான தீர்வாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்தலொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. இப்புதிய திட்டத்துடன் நேற்று (19) இந்த கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்த பயனாளிகளின் நீண்ட வரிசைகளில் கவனிக்கத்தக்கவாறு குறைவை அவதானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் ரணில் விக்கிரமசிங்க?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க நிரப்பவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின் எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரும் அவருடன் இணைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருமாறு ஏற்கனவே பல்வேறு […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது

அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது மாணவி என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சகோதரர் மூன்று நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இல்லாத நேரத்தில், அவரது மனைவி போதைப்பொருள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்- வேன் சாரதி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் வைத்தியர் தெரிவித்தார். இலங்கையில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய் புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க இந்தக் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு மூலோபாயத் திட்டம் – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

🔸 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தேசிய கொள்கை அமைப்பதன் தேவை குறித்து அமைச்சர் அவதானம் ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் நேற்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற […]

ஆன்மிகம் செய்திகள்

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19) காலை திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 26 ஆம் திகதி (26-02-2025) இடம்பெற உள்ள மகா சிவராத்திரி விழாவிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் இலட்சக்கணக்கான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் – 2023 வைப்புப் பணம் மீளளித்தல்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் – 2023 வைப்புப் பணம் மீளளித்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு: