ஆன்மிகம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 11 ஆம் திகதி காலை தீ மிதிப்பு வைபவம் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் திகதி வீதியுலாவும், மார்ச் 14 ஆம் திகதி நீர் வெட்டும் நிகழ்ச்சியும், மார்ச் 15 ஆம் திகதி பூக்குழி ஊஞ்சலும் நடைபெறும்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார். இவ்விசேட மேற்பார்வையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை ஆதார பைத்தியசாலை, வேலனை பிரதேச வைத்தியசாலை, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்திற்கான நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள்

இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது. மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின்கட்டமைப்பிற்கு வழங்கும். இந்த திட்டம் ஒரு பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், இது அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ரயிலில் மோதி காட்டு யானைகள் இறப்பது குறித்து, அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிலிருந்து உடனடி தீர்வுகள்.

நேற்று (20) காலை கல்ஓயாவிற்கும் ஹிங்குராக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் இறந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்கள், ரயில்வே மற்றும் வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு சுற்றாடல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பல தீர்மானங்களை எடுத்துள்ளன. அத்துடன், யானை விபத்துக்கள் அடிக்கடி நிகழும் இந்தப் பகுதியில், ரயில் பாதைகளின் இரு புறங்களும் தெரியும்படி செய்வது, […]

செய்திகள் விளையாட்டு

சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வியாழக்கிழமை பர்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி பயணித்த காருக்கு முன்னால் பயணித்த லொறி எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி பயணித்த ரேஞ்ச் ரோவர் காரின் சாரதி, லொறியின் பின்புறத்தில் மோதாமல் இருக்க பிரேக்கை அழுத்தினார், இதனால் மற்ற வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக […]

கல்வி செய்திகள்

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில் வழங்குதல்

விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாயக் கல்லூரியில் நடைபெறும் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ6) பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலுக்காக உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள திணைக்கள, மாகாண சபைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்காக திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசிக்கவும். ( www.doa.gov.lka)

உலகம் செய்திகள்

FBI இன் புதிய இயக்குநராக இந்தியர் நியமிப்பு

அமெரிக்க குற்றவியல் புலனாய்வு நிறுவனமான Federal Bureau of Investigation (FBI) இன் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (Kash Patel) நியமிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. படேலுக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதன்படி, FBI இன் ஒன்பதாவது இயக்குனராக காஷ் படேல் செயற்படவுள்ளார். டிரம்ப் ஆதரவாளரான படேல், முன்னர் பட விடயங்களுக்கு FBIஐ கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதியான பிறகு, டொனால்ட் டிரம்ப் காஷ் படேலை FBI […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். குறிப்பாக இலங்கையின் பசுமைப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பேண்தகு முன்முயற்சிகளை முன்கொண்டுசெல்வதில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகள் குறித்த பயனுள்ள கலந்துரையாடலொன்று இதன்போது இடம்பெற்றது. திருமதி ஹெலினா மெக்லியோட் மற்றும் அவரது தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், நாட்டில் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துவதில் GGGI […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இலங்கை பிரதமருடன் சந்திப்பு.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து பாராட்டிய மாலைத்தீவு அமைச்சர், திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் திறன் […]

செய்திகள் விளையாட்டு

தசுன் ஷானகவுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்

ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. தசுன் ஷானக கடந்த இரண்டாம் திகதி (பெப்ரவரி 02) நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று நாட்கள் விடுப்பு கோரியதாகவும், ஆனால் அந்தக் காலகட்டத்தில் துபாயில் நடந்த லீக் போட்டியில் பங்கேற்றதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தசுன் ஷானகவின் எழுத்துப்பூர்வ பதிலையும் மன்னிப்பையும் […]