உலகம் செய்திகள்

போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? வாடிகன் விளக்கம்

போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. அதனால் அவர்களை பொலிஸில் கூட இணைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. பாதாள உலகக் குழுக்களுக்கு தற்போது அரசியல் ஆதரவு இல்லாதுபோயுள்ளது. தமது செயல்பாடுகளை செய்ய முடியாதென்பதால் அவர்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ – விசாரணைகளை திசை திருப்ப பாதாள உலகக் குழுக்கள் முயற்சி – புலனாய்வுத் தகவலை வெளிப்படுத்திய அரசு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் ஸ்திரமற்ற நிலையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ. ஆர். பி.செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுக்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதையே […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தையிட்டியில் விகாரை கட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்பு – அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையாகும். இந்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளது. மு.ப. 10.00 – பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இடம்பெறவுள்ளது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பெப்ரவரி 24 முதல் நாட்டின் சில பிரதேசங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2025 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பெப்ரவரி 24 ஆம் திகதி முதல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பணியில் , அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொலிஸ், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனாகவும் அரசியல் தலையீடுகள் இன்றியும் நடைபெறுகின்றன

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் மற்றும் மித்தெணியவில் இடம் பெற்ற வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக மற்றும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (21) விசேட உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இந்த வெடிச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் வருந்துவதாகவும் அவர் கூறினார். […]

தையிட்டியில் தனியார் காணியில் பௌத்த விகாரை – உடனடியாக அகற்ற வேண்டுமென லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், இதனை ‘தமிழீழ சுயநிர்ணய […]