உள்ளூர் செய்திகள் செய்திகள்

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்றாகும்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கொடவேஹேர திகன்னேவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீற்றர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் கொடவேஹேர, திகன்னேவ […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்

சந்தையின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ரவரி முதலாம் திகதி, தனியார் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தற்காலிகத் தடையை அரசாங்கம் நீக்கியது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் புதிய வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, வேகன்-ஆர் போன்ற ஒரு சிறிய காரின் விலை சுமார் ஏழு மில்லியனிலிருந்து 10 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்த

பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டியதாக காணப்படும் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும். – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று பெப்ரவரி 22 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேசட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் மேத்யூ வர்கிஸ் அவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் போது, உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து நன்றி தெரிவித்ததுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாதகமான நடவடிக்கையாக அரசாங்கத்தின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 23ஆம் திகதி இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 23ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் சில தினங்களில் வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது. உயிரிழந்தவர் 38 வயதான ரஷ்யப் பிரஜை ஆவார் உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவு பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விவசாயம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் வியட்நாமிக்கிருக்கும் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் – வியட்நாம் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு (21) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் […]