உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாசாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் – சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். மெத்தக்க பொடிவெலா ஸ்ரீ சுமன ஷைலாராம விகாராதிபதி சங்கைக்குரிய வட்டலத்தே சுமங்கல தேரருக்கு, “ஸ்ரீ பண்ணாலோக” கௌரவப் பட்டத்துடன், விமலகீர்த்தி பெந்தர வெல்லவிட்ட கோரள மற்றும் கலு வெல்லேபட பத்துவின் “அதிகரண சங்கணாயக்க” கௌரவ பட்டத்தை வழங்கும் நிகழ்வு 2025.03.16ஆம் திகதி ஸ்ரீ சுமன ஷைலாராம விகாரையில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் இரு அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பரிசோதிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அதன் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக நேர்மறை வளர்ச்சியை காண்பித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில் 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2,74,19,804 மில்லியன் ரூபாவிலிருந்து இருந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிக தடை

நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைகளை ஆடியோ, காணொளி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

Clean Sri Lanka” இலக்குகளை அடைவதற்காக வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் இன்று (18) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள சார்டட் கட்டிடத்தில் நடைபெற்றது. நாட்டில் ஒழுக்கநெறி, சமூக மற்றும் சூழல் என்ற அனைத்து துறைகளிலும் புதிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் முதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தென்னை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் தொடர் திட்டங்களில் ஒரு திட்டம் கடந்த (12) ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் எரகம பிரதேச செயலகப் பிரிவின் நியூகுண கிராம அலுவலர் பிரிவுக்குள் நடைபெற்றது. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தவாஷி துடைப்பம் தயாரிப்பது தொடர்பான பயிற்சித் திட்டமாக இந்த நிகழ்வு செயல்படுத்தப்பட்டது. அம்பாறை மாவட்ட மகளிர் மேம்பாட்டு அதிகாரி சுரேகா எதிரிசிங்க அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தென்னை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உலக மீள் சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

2025 மார்ச் 18 ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி (Electronic Tree-Wheeler – E-Tuk) அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் இன்று (18) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச் சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

நாடு எனும் ரீதியில் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், கலாச்சார நிகழ்வுகள் இனங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE நேற்று (மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெப்டன் Lionel SIEGFRIED தலைமையில் இயங்கும் PROVENCE, 142.20 மீட்டர் நீளமுள்ள ஒரு நாசகார வகைக் கப்பலாகும். இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​கப்பலின் குழுவினர் நாட்டிலுள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளார்கள். இக் கப்பல் மார்ச் 20 ஆம் தேதி நாட்டைவிட்டு செல்லவுள்ளது

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாதுகாப்பு பிரதி அமைச்சரை இலங்கை செஞ்சிலுவை சங்க தூதுக்குழுத் தலைவி சந்தித்தார்

இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுத் தலைவர் Séverine Chappaz, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ​​இருவரும் சமூக நல முயற்சிகள், மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அமைப்பின் முக்கிய பங்கை பிரதி அமைச்சர் பாராட்டியதுடன், […]