உள்ளூர் செய்திகள் செய்திகள்

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில்

• நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க இடமில்லை. • பல குற்றக் கும்பல்கள் ஒரே நேரத்தில் செயல்படுவது சதித்திட்டமா என்பது சந்தேகமே • காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தற்போதைய அரசாங்கம் நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை பலதடைவைகள் பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய […]

செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கவதில் சந்தேகம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வரும் 2ஆம் திகதி துபாயில் மோத உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு 2 நாட்கள் ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் தலைவர் ரோஹித் சர்மா […]

செய்திகள் விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார். பின்னர் […]

உலகம் செய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் – காரணம் என்ன?

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். IATO வின் தலைவர் ராஜீவ் மெஹ்ராவின் கூற்றுப்படி, இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகான தீவாக இருப்பதாலும் கலாச்சார உறவுகள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதாலும் இந்திய பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துக

அபிவிருத்தியை போலவே வீழ்ச்சியடைந்திருக்கும் சமூக கட்டமைப்பையும் உயர்த்தி வைக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது – அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி வலியுறுத்தல் 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3%- 4% ஆக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று முன் தினம் (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. வெருகல், வாகரை ஆகிய திருகோணமலை – மட்டக்களப்பு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030 பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தென்கொரிய விசா மோசடியில் சிக்க வேண்டாம் – வெளியானது எச்சரிக்கை

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். E-8 விசா பிரிவின் கீழ் வேறு எந்த நபரோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமோ […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி27ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 27ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா […]