ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க – ரவிகரன் எம்.பி
நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (01.03.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை […]