உள்ளூர் செய்திகள் செய்திகள்

லிய சக்தி 2025 2025 பெண்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 – 6 ஆம் திகதிகளில் விகாரமகா தேவி வெளியரங்கில்

“காந்தா வியவசாய கத்வய துலின் கொடநகமுதே” (பெண்களின் சுயதொழில் முயற்சியாண்மை ஊடாகக் கட்டியெழுப்பப்படுபவை)” எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் லிய சக்தி 2025 பெண்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மு.ப. 6 மணி முதல் பி.ப. 10 மணி வரை கொழும்பு 7 விகாரமகா தேவி வெளியரங்கில் நடைபெறும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பெண்களின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம்

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு Vital Strategies நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Bloomberg Philanthropies மற்றும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் சுகாதாரத்திற்கான தரவுகள் (னு4ர்) தொடக்க முயற்சி வேலைத்திட்டத்தின் மூலம் முக்கியமான பொதுச் சுகாதார தகவல்களைத் […]

உலகம் செய்திகள்

பொலிவியாவில் பேருந்து விபத்து – 37 பேர் பலி

தென்மேற்கு பொலிவியாவில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயுனி மற்றும் கோல்சானி இடையேயான சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, மேலும் முதற்கட்ட விசாரணையில், அதிக வேகம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான ஒருரோ கொண்டாட்டத்திற்குச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று (01.03) சந்தேக நபரை கைது செய்துள்ளனர். போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செய்திகள்

நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன. நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும். எரிபொருள் விநியோகத்திற்காக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்வதற்கான உத்தரவு (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவு பிரிவால் வெளிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 02 காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் […]

உலகம் செய்திகள்

காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் நாளில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் உயிருடன் மற்றும் இறந்தவர்களில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. நிரந்தர போர் […]

உலகம் செய்திகள்

டிரம்ப் மோதலுக்குப்பின் ஸெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதி ஸெலன்ஸ்கியை சாடிய பின் ஸெலன்ஸிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் டிரம்ப்பை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் தெரிவித்த கருத்து ஸெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது காலங் காலமாக நட்பு நாடுகளாக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு […]