உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு நிமிட நேரத்தை கோரியிருந்தார். அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப அவருக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது எனினும், அவர் மற்றுமொரு கருத்தை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் கரிம தரநிலைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை

இலங்கையின் தேசிய கரிம விவசாயத்திற்கான சட்ட நிலை மற்றும் அதன் முன்மொழியப்பட்ட வேறுபாடுகள் தொடர்பாக தேசிய ஆலோசனை வேலைத்திட்டம் ஒன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தலைமையில் நேற்று (04) இடம்பெற்றது. தேசிய கரிம விவசாய முறையின் சட்ட கட்டமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிமுகப்படுத்துவதே இந்த ஒருநாள் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகும். இலங்கையின் தேசிய கரிம தரநிலையை ஐக்கிய இராச்சியத்தின்(GB) கரிம விதிமுறைகளுடன் ஒருங்கிணைத்தல், ஒழுங்குமுறை இடைவெளிகளைக் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கிழக்கு மாகாணத்தின் ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயம்

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தின் இறுதி கட்டத்தின் நிருமாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஆலோசனை பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் நிலையமும் திறப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் உட்பட தற்போதைய செயற்பாடுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாட்டின் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பை மிகவும் முறையானதாகவும் மற்றும் அதிக வசதிகளுடனும், நோயாளர்களுக்கான சிகிச்சை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சோமாலிய மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் குறிக்கிறது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை” சின்னத்தில் தயார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “கதிரை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி வேட்பாளர்களைத் தயாரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு

குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தலைமையில் நடைபெற்றது. கல்லூரியைக் கட்டுவதற்கான பணிகளுக்கு கொரிய அரசு (KOICA) 2,898 மில்லியன் டாலர்களும், இலங்கை அரசு 1,112 மில்லியன் டாலர்களும் ஒதுக்கியுள்ளன. இதற்காக செலவிடப்பட்ட மொத்த செலவு 3,510 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:

2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 – உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை

2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை 2025 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2025 மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

செய்திகள் விளையாட்டு

இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அங்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகின்றன. இது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தாலும், […]

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியது – வசந்த சமரசிங்க

சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியதாகவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்காது என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார். இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 30,000 பேரை அரசு வேலைகளுக்கு நியமிக்க 10,000 மில்லியன் ரூபாய் […]