உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு 🔸 ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்… 🔸 இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள் – வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல், கட்சி, நிறப் பாகுபாடு இல்லை… 🔸 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடுசெய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025″ நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025 ஏப்பிரல் மாதம் 30 ஆந் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுக்கின்றது. “கைத்தொழில் பிரிவு” , “தொழில்முயற்சி மற்றும் கருத்திட்டப் பிரிவு” மற்றும் “நிறுவன, வெகுசன ஊடக மற்றும் சமூகப் பிரிவு” எனும் மூன்று பிரதான பிரிவுகளின்கீழ் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதற்கிணங்க “கைத்தொழில் பிரிவு” அனது “பாரிய அளவிலான பிரிவு” […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மீதான செலவு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இன்று (06) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெறாது காணப்பட்ட ஜனாதிபதி ஊடக விருது விழா இவ்வருடத்தில் மீண்டும் நடாத்தப்படுவதாக அமைச்சர் இதன்போது அறிவித்தார் இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அரசாங்க தகவல் திணைக்களம், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்ய உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போதே அவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டார். மாத்தளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன், மாவட்ட செயலகம், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றுடன் இணைந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை” என்பது மீட்டெடுக்க முடியாத ஒரு நிறுவனம் அல்ல…

இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வலியுறுத்தினார். இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அளப்பறிய பொதுச் சேவையொன்றை வழங்கும் நிறுவனமாகும், தற்போது இந்த நிறுவனத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதை மீண்டும் எழுச்சி பெறச் செய்ய முடியாத நிறுவனம் அல்ல என்று இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க வலியுறுத்துகிறார். நேற்று (06) இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் துறைப் பொறுப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளுக்கு இணங்க 2025 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது எந்த ஒரு வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையாக 235,618 சுற்றுலா பயணிகள் 2018 ஆம் ஆண்டில் வருகை தந்தனர். அதன்படி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

40 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு பிரஜைக்கும் குறிப்பிட்ட காலப் பகுதியில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – சுகாதார மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர்

மக்கள் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமானது எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்த நாட்டின் வாழும் 40 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு என குறிப்பிட்ட காலப்பகுதியைத் தெரிவு செய்து அக்காலப் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு வாய்ப்பு அளிப்பதாகும். அதனால் அடையாளம் காணப்படும் நோய் நிலைமைக்கு அவசியமான சிகிச்சை சேவைகளை வழங்குவதும், அதனுடன் தொடர்புடைய நீண்ட காலத் திட்டம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் இணைத்துள்ளதுடன் தற்போது சுகாதார […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்காக, பயணிகளை விழிப்புணர்வூட்டல் – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறையை ஒழிப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (05) பெஸ்டியன் சாலை தனியார் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுஇ மகளிர் விவகார அமைச்சு இந்த ஆண்டு மகளிர் வாரத்தை அறிவித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலை ஒழிப்பதற்கான நாளாக மார்ச் 05ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகளில் அடையாளமாக ஒட்டப்பட்டன. பெண்களுக்கு […]

செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மிட்செல் சாண்ட்னர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார். தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பதிலாக அணியின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வடக்கு கரையோரப் பகுதிகளில் […]