உள்ளூர் செய்திகள் செய்திகள்

நெஞ்சம் மறப்பதில்லை பாடல் பாடி நடுவர்களை மெய் மறக்க செய்த போட்டியாளர்

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் மாதம் 08ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் வறண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நாடு பூராகவும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகலில் […]

செய்திகள்

நெஞ்சம் மறப்பதில்லை பாடல் பாடி நடுவர்களை மெய் மறக்க செய்த போட்டியாளர்

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பஸ் இல் இந்த வாரம் Performance round அதில் குட்டிப் போட்டியாளர்கள் மிகவும் அருமையாக பாடல்களை பாடி அசத்துகின்றனர். அந்த வகையில் யோகஸ்ரீ எனும் போட்டியாளர் நெஞ்சம் மறப்பதில்லை எனும் பாடலை பாடுகிறார். அதில் நடுவர்கள் மெய் மறந்துவிட்டதோடு, சுசிலா அம்மா பாடி வைத்த பாடலை யாரும் தொட முடியாது என்று நினைத்திருந்தோம் ஆனால் நீங்கள் தொடுகிறீர்கள் என்று கூறி அவரை பாராட்டுகின்றனர்.

வணிகம்

இந்த திகதிகளில் வானில் தெரியவுள்ள ‘ப்ளட் மூன்’

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது ப்ளட் மூன் என அழைக்கப்படுகிறது. 2022 ஆம் வருடத்துக்குப் பிறகு தற்போது இரண்டு நாட்கள் இந் நிகழ்வு ஏற்படவுள்ளது. அதன்படி சுமார் 5 மணித்தியாலம் இக் கிரகணம் நீடிக்கும். இத் தருணத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமியானது நேரடியாக நிலைநின்று சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும்.

சினிமா

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளதாக நடிகர் பரத் வெளியிட்டுள்ளார்.

சினிமா

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

சினிமா

தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்…கல்பனா விளக்கம்

பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின. அவர் தற்போது குணமடைந்து வரும் நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நானும் எனது கணவரும் மகளும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்கள் குடும்பத்தை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் தற்போது முனைவர் பட்டமும், எல்.எல்.பி பட்டமும் படித்து வருகிறேன். தொழில்ரீதியாக ஏற்பட்ட […]

உலகம் செய்திகள்

மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் கொழும்பு பயணத்தின் போது இந்திய – இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என […]

உலகம் செய்திகள்

ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி

லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான […]

செய்திகள் விளையாட்டு

இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா செய்ய வேண்டியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெரிய அளவில் ஓட்டங்களை குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை தினம் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெரராரி ரக வாகனத்தை ஓட்டுபவருக்கு போலியான அனுமதிப்பத்திரம் ஒன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, “ உண்மையிலேயே, சபாநாயகர் அவர்களே, இன்றைய விவாதத்தை நாம் ஒரு சோகமான செய்தியுடன் […]