உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி 20 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக 10 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்

‘ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணீ குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “ இன்று மகளிர் தினம். தனது உரிமைகளை பாதுகாக்கும் சமத்துவ வாழ்க்கை அமைய வேண்டும் என அனைத்து பெண்களையும் வாழ்த்துகிறேன். நாம் பல வருட காலமாக பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எகஸ் தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான காணொளி சந்திப்பின் போது சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குமான அவசியம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை தொடர்ந்தும் உறுதிப்படுத்திய அவர் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இம்யூனோகுளோபுலின் மருந்துகளில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக தகவல்

கடந்த அரசாங்கத்தின் போது இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்துகளில் நீர் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெப்புரோன் தடுப்பூசி முன்பு 70,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது, இப்போது நாங்கள் அதை 370 ரூபாய்க்கு வாங்குகிறோம் என்றும் அவர் கூறினார். முன்னாள் சுகாதார அமைச்சர் ஒரு இலட்சத்து 20,000 ரூபாய்க்கு இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை வாங்கினார், இப்போது நாங்கள் அதை 30,000 ரூபாய்க்கு வாங்குகிறோம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ரணில் வழியில் செல்லும் அநுர அரசு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” கடந்த அரசாங்கம் பயணித்த தொங்கு பாலத்திலே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. அதே வழிமுறைகளையே பின்பற்றி வருகிறது. மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில் முதன்மை செலவை 13 வீதமாக மாற்றியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறான பேச்சுவார்த்தையை நடத்த மாட்டார்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் நேற்று (07) பி.ப 4.30 மணியளவில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநித்தி மற்றும் நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷ சூரியபெருமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உயரதிகாரிகள், பிரதேச மக்களுடைய பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது. முதல் கட்டமாக பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து இந்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி

இலங்கை மின்சார சபையில் பொறியாளர்கள் உள்ளிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு சூரிய சக்தி போன்ற ஏனைய மாற்று எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்தி கட்டமைப்பை நிலையாகப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – அதிகாரிகள் வீதி விளக்குகள் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களும் இலங்கை மின்சார சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்து அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என வலுசக்தி கௌரவ அமைச்சர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பெண்கள், ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்தும் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்கள்

ஒட்டுமொத்த சமூக அமைப்பிலிருந்து பெண்கள் தவிர்க்க முடியாத முக்கிய பங்காளர்களாக இருப்பதோடு, அந்த சமூக அமைப்பின் படைப்பாற்றல் கலைஞர்களும் பெண்கள் தான். இதனால்தான் சிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி “உலகம் சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டது” என்று கூறினார். நமது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், ஒரு சமூகமாக நாம் இன்னும் அவர்களுக்குத் தகுதியான சமூகப் பாதுகாப்பு, கண்ணியம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சர்வதேச மகளிர் தினம் 2025: கூட்டு செயற்பாடுகளுக்கான முக்கிய தருணம்

இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம் – அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல. ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்புசார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலமாகும். பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் ஆகியன பெண்களை பொருத்தமற்ற […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை. […]