ஆன்மிகம் ராசிபலன்

ராசி பலன்கள்

(09-03-2025) ராசி பலன்கள் மேஷம் மேஷ ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..! மார்ச் 9, 2025 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

தேசிய காலநிலை மத்திய நிலையத்தின் எதிர்வு கூறல் பிரிவினால் வெளியிடப்பட்டது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல் 2025 மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 05.30 ට வெளியிடப்பட்டது. மார்ச் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் தற்காலிக மாற்றத்தை எதிர்பார்க்கப்படுவதுடன், விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யலாம். இன்று இரவு வேளையில் […]

சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் இம் மாத இறுதியில் படத்தின் முன் பதிவு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் […]

சினிமா

“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நடந்ததோ அதனை மையமாகக் கொண்டு இந்த வெப் தொடரை எடுத்துள்ளேன். இந்த தொடரை எடுக்கக்கூடாது என சிலர் என்னை மிரட்டினர், பயந்து அழுதேன், ஓடி ஒளிந்தேன். இருப்பினும் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் துணிச்சலுடன் இந்த வெப் […]

உலகம் செய்திகள்

கனடாவில் துப்பாக்கி பிரயோகம் – பலர் வைத்தியசாலையில்

கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். டொரொண்டோவில் ஸ்கார்பரோ நகரிற்கு அருகில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களே காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வருடமும் டொரொண்டோவில் துப்பாக்கி பிரயோகங்களினால் 43 பேர் […]

உலகம் செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பணியிடங்களில் துன்புறுத்தப்படும் பெண்கள் – சஜித் பிரேமதாச

பணியிட வன்முறை மற்றும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டில் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு ஆறு வேலை நாட்களை இழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வேலை நாட்கள் இழப்பால் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் ஒன்பது நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, பணியிடத்தில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது. 2023 மாரச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது, 2022 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த பொருளாதார […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

தனியார் வகுப்புகளை நடாத்துவதற்குத் தடை

2024(2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 3527 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, 2025.03.11 நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, குறித்த பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தில் 27,500 மெற்றிக் தொன் உரத்தை பயன்படுத்தி 56,000 மெற்றிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கலப்பு உரத்தை 4,000 ரூபா மானிய விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் கலப்பு […]