உள்ளூர் செய்திகள் செய்திகள்

Clean Sri Lanka” வின் கீழ் “நகர பசுமை வலய” வேலைத்திட்டம் – முதற்கட்டம் பேலியகொட மற்றும் ஒருகொடவத்தையில் ஆரம்பம்

நாட்டுக்குள் ஒழுக்க, சமூக மற்றும் சூழலியல் ரீதியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்தை மேலும் உயர்வான நிலைக்கு உயர்த்தி வைப்பதை நோக்காக கொண்ட “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் “முன்னோடி நகர பசுமை வலய” வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதற் கட்டத்தின் கீழ் பேலியகொட மற்றும் ஒருகொடவத்த பகுதிகளில் “முன்னோடி நகர பசுமை வலய” வேலைத்திட்டங்கள் இரண்டை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை நகர திட்டத்தின் கீழ் நகர திட்டமிடல் வேலைத்திட்டமாக அரச மற்றும் தனியார் துறை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்த ஆண்டு நடுப்பகுதியில் சுகாதார அமைச்சகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும்.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் சுகாதார அமைச்சகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும். கட்டுமானப் பணிகளை துரிதபடுத்த ரூ. 300 மில்லியன் நிதி ஒதுக்கப்படும். கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்தார். காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர், இந்தக் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள பெருமளவான மாணவர்கள்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீதமான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான வகுப்புகளில் கல்வி கற்கும் 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன், 40.9 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்

2023 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருப்பதாக அமைச்சு அறிவித்திருந்தது. . 2024, பெப்ரவரி 3 அன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவு அமைச்சருமான […]

உலகம் செய்திகள்

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்

அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், நரகத்தின் வாயில்கள் திறக்கும். ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை வான், கடல் மற்றும் நிலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முழு தீவிரத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும். பணயக்கைதிகள் திரும்பும் வரை மற்றும் தெற்கு குடியிருப்பாளர்களுக்கு உள்ள அனைத்து அச்சுறுத்தல்களும் […]

செய்திகள் விளையாட்டு

‘ஐபிஎல் 2025’ – டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள ஹாரி புரூக்கிற்கு மாற்றாக ஷானக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அண்மையில் முடிவடைந்த ஐஎல் டி20 போட்டியில் துபாய் கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் தசுன் ஷானக முக்கிய பங்கை வகித்திருந்தார். போட்டியில் அவரது […]

உலகம் செய்திகள்

பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் கழித்த பிறகு சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களை அழைத்துவந்த விண்கலமான ஸ்பேஸ்எக்ஸின் டிராகன், புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், நேற்று நிலவரப்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளது.