உள்ளூர் செய்திகள் செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அஷேன் பண்டாரவும், சம்பந்தப்பட்ட புகார்தாரரும் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் என கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரவின் கார் சாலையை மறித்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் உறுதியளித்தவாறு கோழி தீவனத்தின் விலையை குறைக்காமையினால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வடக்கிற்கு கைத்தொழில் முதலீடுகள் பல

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய எனினும் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கக்கூடிய வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் வட மாகாணத்தில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களில் சிலவற்றை மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு இணங்க உத்தேசிக்கப்பட்ட புதிய கைத்தொழில் நகரம் ஒன்றுக்காக அவசியமான திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

36,000 ஏக்கரில் தெங்குச் செய்கை திட்டம்

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தெங்குச் செய்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கரிலும் ஏனைய பகுதிகளில் 20,000 ஏக்கர் பயிரிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சரின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சரினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தெங்குச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருடத்தில் 2.5 […]

செய்திகள் விளையாட்டு

ஈட்டி எறிதலில் உள்நாட்டு சாதனையை முறியடித்தார் சுமேத ரணசிங்க

தியகமாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உள்நாட்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் சுமேத ரணசிங்க 85.78 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக 2024 ஆம் ஆண்டு ருமேஷ் தரங்கா 85.45 மீட்டர் எறிந்தமை இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இதற்கிடையில், இன்றைய சுமேத ரணசிங்கவின் செயல்திறனுடன், செப்டம்பர் மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சம்பியன்ஷிப்பிற்கு அவர் நேரடியாக தகுதி பெற்றுள்ளார். 2019ஆம் […]

உலகம் செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக யுன் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் நேற்று யூனை இனி தடுப்பு காவலில் வைக்க முடியாது என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் முடிவு செய்ததை அடுத்து, யூனின் விடுதலை சாத்தியமானது. சிறையில் இருந்து […]

உலகம் செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். கார்கிவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வை அமெரிக்கா இடைநிறுத்தியதால், அண்மைய நாட்களில் ரஷ்ய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09) அதிகாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றனர்.