உள்ளூர் செய்திகள் செய்திகள்

செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும் – வட மாகாண ஆளுநர்

செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். மண் இல்லாது போனால் – மண் வளம் குன்றிப்போனால் விளைச்சல் இல்லாதுபோய்விடும். எனவே எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு விவசாயிகள் குறைந்த செலவில், கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சிறுபோக பயிரச்செய்கையில் நவீன முறைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08 ஆம் திகதி நடைபெற்றது. வடக்கு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை

2025 மார்ச் 10 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 10 ஆம் திகதி காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்து, யாழ்ப்பாணப் பகுதியில் சட்டவரோதமாக தங்கியிருந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைவரும், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து குடியகல்வுத் துறை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மதப் பிரச்சார சேவையை நடத்தத் தயாராகி வந்தனர், மேலும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபரான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறிய 15 இந்தியர்கள் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பு

நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இந்திய பிரஜைகள் குழு, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவிற்கான பிரசாரப் பணியிலும், தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்பவர்களாகவும் பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்திருந்தனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்பதால், மறைந்திருக்கும் பொலிஸ்மா அதிபரை கைது […]

உலகம் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

அவுஸ்திரேலியாவில் எல்ஃபிரட் சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிசுக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை நாளை முதல் கட்டம் கட்டமாக திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அனர்த்த நிலைமைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகள் விளையாட்டு

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படமான பராசக்தியின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது. படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ரவி மோகன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று அண்மையில் ஊடகங்களிடம் தெரிவிதிருந்தார். பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் – சமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால் தானும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு தங்காலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.