உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுஜன பெரமுனவில் பிரதேச சபையில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். நேற்று (09) தங்கல்லை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இளைஞர்கள் போட்டியிட இணைந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

செய்திகள் விளையாட்டு

தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது தொடர்ச்சியான 12வது தோல்வியாகும். அதன்படி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்த ரோகித் சர்மா, இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் […]

உலகம் செய்திகள்

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் காலமானார்

லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிரடெரிக் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். அவர் லக்சம்பர்க் இளவரசர் ரொபர்ட்டின் மகன் ஆவார். அத்துடன், லக்சம்பர்க் கிராண்ட் டியூக் ஹென்றியின் உறவினர். நீண்ட உடல்நலப் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த முதலாம் திகதி இளவரசர் பிரடெரிக் உயிரிழந்துள்ளார். அவர் POLG மைட்டோகாண்ட்ரியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. POLG நோய் என்பது உடலின் செல்களின் ஆற்றலைப் பறிக்கும் ஒரு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பொருத்தமற்ற நடத்தை மற்றும் திட்டங்கள் குறித்து ஆர்வம் இல்லாத காரணத்தால், இந்திய கூட்டு நிறுவனமான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், மூன்று நாள் விஜயமாக இன்று காலை திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுவதற்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான ஆலோ பிளாக் இலங்கைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூத்த ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் பிளாக் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகரும் தொழில்முனைவோருமான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த 32, 36 வயதுடைய பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட மேலும் இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு – 2025

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (09.03.2025) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் 22 வீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எனவும், மாவட்ட நிகழ்வில் பெண்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு நாளை முதல் தடை

2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு நாளை (11) நள்ளிரவு 12:00 மணி முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி மார்ச் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.