உள்ளூர் செய்திகள் செய்திகள்

தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டமொன்று

சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்புப் பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் பக் மாதத்தில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை கண்காட்சிக்காகபெரஹெரவிற்காக தீயணைப்புத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேசிய செல்வத்தை மிகுந்த முயற்சியுடன் செலவிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறான மோசமான நடத்தைகள் முழு நாட்டிற்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணின் மரணம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்த தெரிவித்தார். பிரச்சினைகள் குறித்து தபால்மா அதிபருடன் கலந்துரையாடிய போதிலும் எந்தவித தீர்வும் கிடைக்காமையால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் மஞ்சுள ஜயசுந்த கூறியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை தரப்படுத்தல்

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாத குறியீடு என்பது சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் பயங்கரவாதத்தின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் தரவரிசை ஆகும். உலக மக்கள்தொகையில் 99.7 வீதம் பேரை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கம்பஹா மாவட்ட அரச நிறுவன வளாகங்களில் 1000 தென்னங்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களிலும் 1000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதிகபட்ச நில பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், எதிர்காலத் தேங்காய் நுகர்வை பூர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்வதற்கும், கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க, தென்னை அபிவிருத்திச் சபை, முதல் கட்டத்தின் கீழ் 750 தென்னங்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் 100 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச்11ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 11ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

ஆன்மிகம் செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருவிழாவை வெற்றிகரமாக நடாத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இவ்விழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்து இலவச விவசாயத் தகவல்களைப் பெறுங்கள்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது. இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம். இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை ஏற்றுக்கொண்டு தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவிப்பு தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும் ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சர் […]