சினிமா

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பத்ரி திரைப்பட நடிகர்

கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹூசைனி, பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளதுடன் வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லிக் குற்றமில்லை, பத்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்துமிருந்தார். இந்நிலையில் அவர் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு இரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. நான் ஒரு நாள் வாழ்வதற்கு 2 யுனிட் இரத்தம் மற்றும் ப்ளேட்லெட்ஸ் தேவை. நான் கொஞ்ச நாட்கள்தான் உயிருடன் இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். நான் கராத்தே பயிற்சியளிக்கும் […]

சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார். வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல் உடை விற்பனை அங்காடியான ZUZI ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நடிகர் ரவி மோகனும் கீர்த்தி சுரேஷுடன் இலங்கைக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் நடிகர் சிவக்கார்த்தியேனர் மற்றும் […]

சினிமா

விஜய் அண்டனியின் ‘சக்தித் திருமகன்’ நாளை வெளியாகும் டீசர்

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25 ஆவது திரைப்படம் சக்தித் திருமகன். படத்தில் கதாநாயகியாக விளம்பர பட நடிகை த்ரிப்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என அறிவித்துள்ளது.

சினிமா

நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்கும் நாடோடிகள் திரைப்பட நடிகை

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. இவர் பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாதவர் என்றாலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் அருமையான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார். இந்நிலையில் நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனை விரைவில் கரம் பிடிக்கப் போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது காதலன் யாரென்பது விரைவில் தெரியவரும். இந்நிலையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 […]

உலகம் செய்திகள்

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி – இந்தியாவுடனான உறவை புதுபிக்க உத்தேசம்

கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் கவனம் பெறுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து […]

உலகம் செய்திகள்

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைது செய்துள்ளது. ஹொங்காங்கிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அரசாங்க சேவையின் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முன்னுரிமை மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு அதனுடன் இணைந்த அத்தியாவசியத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய 5,882 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளைக் கருத்திற்கொண்டு பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

முதலீட்டாளர்கள் எந்த தரகுப் பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நிறைவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பில்லை. இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

2024/2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பானது

இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அனைத்தும் முழுமையாக முடியடையும் வரை, மேலதிக வகுப்புக்களை, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்ள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்களை அச்சிட்டு வௌியிடுதல், பரீட்சைக்குரிய வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற வினாக்கள் வழங்கப்படும் என்று சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துதல் அல்லது வைத்திருத்தல் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வரும் நிலையில், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகளும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2025/03/24 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் […]