உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசபந்து தென்னகோனை தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி மாத்தறை மொரவக்க பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (11) சோதனை நடத்தியுள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க, அவரது வீட்டைப் பரிசோதிக்க தம்மிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என நேற்று (11) அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக ஐந்து பொலிஸ் குழுக்களால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தின் அடிப்படையில், அனுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும், சுகாதார […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

புலிகளின் தலைவரின் வீரச்சாவை அறிவித்தவர்கள் மீது சீற்றம்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக அமைதியாக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை

முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிற முக்கிய பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு முழுவதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர். இதன்படி, இன்று காலை எட்டு மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் நாளை, வியாழக்கிழமை, மார்ச் 13 காலை எட்டு மணி வரை தொடரும் எனவும், இது நாடு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் ஒருங்கிணைந்த உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு, பார்வை குறைபாடு போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகளின் வசதிக்காகவும், பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும், பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஒருங்கிணைப்பு உதவி மையம் ஒன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நேற்று (11) முற்பகல் மாகும்புர பன்முக போக்குவரத்து மைய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார். நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாதுகாப்பிற்காக அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதன்போது கலந்துரைாடப்பட்டன. பொருளாதார […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

2025 மார்ச் 12 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஹட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் இன்று செவ்வாய்யக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகைத்தந்த சந்தேகநபர்களிடம் அவர் இலஞ்சம் பெற முயன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் விளையாட்டு

டெல்லி அணியின் தலைமை பொறுப்பை ஏற்க கே.எல்.ராகுல் மறுப்பு

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லி அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கே.எல்.ராகுல் அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அணியில் துடுப்பாட்ட வீரராக தொடர்வதற்கு அவர் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், டெல்லி அணியின் தலைவராக அக்சர் பட்டேல் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.எல்.ராகுல் கடந்த காலங்களில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளின் தலைவராக செயற்பட்டிருந்தார். எனினும், அந்த அணிகளால் ஐபிஎல் கிண்ணத்தை […]