உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் படிக்கும் 4 முதல் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி,அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை வியாழக்கிழமை (13) காலை 8.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது?” மகளிர் தினத்தில் தமிழ் தாய்மார்கள் கேள்வி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு நீதி கோரி 8 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என இவ்வருட சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டித்த வடமாகாண தமிழ் தாய்மார்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். வடமாகாணத்தில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டின் வருமான இலக்குகளை அடைவது போன்ற விடயங்களை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. வரி சேகரிப்பில் செயல்திறன் மற்றும் நியாய போக்கு என்பவற்றை உறுதி செய்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைப்பது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. மதுபானம் மற்றும் புகையிலைத் தொழிற்துறையை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (11) மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் (12) திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என்றும் பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார். மழைக் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அதன் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டு, வினாடிக்கு 530 கன அடி நீர் அபங் கங்கைக்கு வெளியேற்றப்பட்டது. பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 113,200 ஏக்கர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலயத்தை “மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக” மாற்றியமைப்பதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

“க்ளீன் ஶ்ரீ லங்கா” என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, “மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் 2025 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி “அழகான தீவு – புன்னகைக்கும் மக்கள் ” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் […]

சினிமா

பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது

சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இப் படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்தில் பிக்பொஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன், பாலா, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப் படம் இம் மாதம் […]

உலகம் செய்திகள்

ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறினார். ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகள், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்புமனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ள லொஹான் ரத்வத்தே

கண்டி மக்கள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். நேற்று (11) மஹய்யாவ பிரதேசத்தில் அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும், பல துரதிஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக சுமார் மூன்று மாதங்களாக தனது கட்சி அலுவலகம் மூடப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தீர்மானமொன்றை […]