மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கத் தயாராக வராமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிருப்தி
தயாராக வருமாறு கூறி அறிவுறுத்தி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர் மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு கூறி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர். மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு […]