உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒவ்வொரு துறையிலும் நாட்டுக்குத் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என்ற உண்மையை அரசாங்கம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் அவசியம் – ஜனாதிபதியின் செயலாளர்

அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம்,வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த பிரச்சினைகளுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். நில்வலா கங்கையின் உப்பள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC)ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு (JFTC) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தபோது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. வர்த்தகத்தில் நியாயபூர்வமிக்க தன்மையை உருவாக்குவதன் […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு 10 நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்தனர். பாடசாலை மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாவாக இவ்வாறு ஜனாதிபதி அலுவலகம் (பழைய பாராளுமன்றம்) மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி சுற்றுலாவுடன் இணைந்ததாக, அரசாங்கத்தின் முன்னோடி வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தௌிவூட்டப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் சிரேஷ்ட […]

உலகம் செய்திகள்

அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்கவிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 பில்லியன் யூரோவுக்கு ($28.33 பில்லியன்) மேலான வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை அன்று தெரிவித்தது. எஃகு, அலுமினியம் உள்ளிட்ட அமெரிக்கப் பொருள்களுக்கான புதிய வரி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று அது கூறியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் திகதி அமெரிக்கப் பொருள்கள் மீதான தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி […]

செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் – ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். கடந்த திங்கட் கிழமை இரவு […]

சினிமா

‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்

பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் நடிகை கீதா கைலாசம் கூறும்போது, “படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. படத்தில் பணியாற்றி 45 பேரும் ஒன்றாக கிராமத்தில் இருந்தோம். அந்த ஊர் மக்களும் எமது நண்பர்களாகிவிட்டனர். படத்தின் கதாநாயகி ரூபா 35 நாட்கள் சடலமாக நடித்தார். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் – மன்னாரில் நான்கு சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (12.03) புதன்கிழமை மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இதன்போது,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, இளைஞர் மற்றும் விளையாட்டு விவாகர அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

2025 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நிறைவு மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

“2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.03.14ம் திகதி வெள்ளிக் கிழமை நிறைவடையும். என்பதுடன், அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.04.01ம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகும்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

– முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டது. முறையான […]