செய்திகள் விளையாட்டு

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம் இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள் நீர் கொழம்புசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இறக்குமதி செய்யப்பட்ட 9400 சிகரெட்டுகள் அடங்கிய 47 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,444 பேரும், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் (பிரதி சபாநாயகர்) தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர் இன்று இலங்கை வருகை

🔸 இந்தத் தூதுக் குழுவினர் நாளை (20) பாராளுமன்றத்திற்கு விஜயம் இலங்கையின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அழைப்பையேற்று வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் கௌரவ நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தருகின்றனர். இந்தத் தூதுக்குழுவினர் நாளையதினம் (20) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதமர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ கார்மென் மொரினோ (Carmen Moreno) அவர்கள் அண்மையில் (17) இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இலங்கையின் புதிய அரசியல் மற்றம் மற்றும் புதிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் – கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். மெத்தக்க பொடிவெலா ஸ்ரீ சுமன ஷைலாராம விகாராதிபதி சங்கைக்குரிய வட்டலத்தே சுமங்கல தேரருக்கு, “ஸ்ரீ பண்ணாலோக” கௌரவப் பட்டத்துடன், விமலகீர்த்தி பெந்தர வெல்லவிட்ட கோரள மற்றும் கலு வெல்லேபட பத்துவின் “அதிகரண சங்கணாயக்க” கௌரவ பட்டத்தை வழங்கும் நிகழ்வு 2025.03.16ஆம் திகதி ஸ்ரீ சுமன ஷைலாராம விகாரையில் கௌரவ சபாநாயகர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை தாபித்தல் – சபாநாயகர் அறிவிப்பு

பத்தாவது பாராளுமன்றத்திற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினை தாபிப்பது தொடர்பான பிரேரணைக்கு 2025 மார்ச் 15 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார். 🔸 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, இந்தச் சபையிலும் சபைக்கு வெளியிலும் குறிப்பாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையில் சந்திப்பு

“வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது” – ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையிலான சந்திப்பு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

“இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம், தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும், திட்டமிட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும்” – ஜனாதிபதி இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மகத்தான பங்களிப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு விசேட பங்களிப்பை வழங்கி வருகின்றது. சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் பங்களிப்புடன் கடந்த வருட பெரும்போகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4471 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டு அறுவடை செய்த கிட்டத்தட்ட 16 இலட்சம் கிலோகிராம் நெல் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் […]

ராசிபலன்

இன்றைய (20-03-2025) ராசி பலன்கள்

மேஷம் மார்ச் 20, 2025 செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம்ரோஸ் நிறம் அஸ்வினி : பதற்றமின்றி செயல்படவும். பரணி : கற்பனைகள் […]