உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற சீருடையில் விளையாடி வருகின்றனர். நீலநிறம் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.
இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் விரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதாலும் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி மட்டும் தன்னுடைய சொந்த சீருடையில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற அணிகள் தங்களுக்கான சீருடையின் நிறங்களை, அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் ஐசிசி கூறியுள்ளது.
அந்த வகையில் ஜூன் 30ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது