மினுவங்கொடை குழப்பநிலை தொடர்பில் காவற்துறையினரை புறக்கணித்து வரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த உள்ளிட்ட மூன்று பேருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் வௌிநாடு செல்ல தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மினுவங்கொடை காவற்துறை , நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.