கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மருத்துவமனையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மேற்கொண்ட சத்திர சிகிச்சை தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட முடியும் என்று .பொலிஸ ஊடக பேச்சாளரும் பொலிஸ அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநட்டில் பொலிஸ ஊடக பேச்சாள இதனை தெரிவித்தார்.
சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய இந்த வைத்தியர் குருநாகல் பொலிவாரினால் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டார்.
இவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ ஊடக பேச்சாளர் கூறினார்..