அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை (21) சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.