தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என்பது குறித்து ஆராய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டேப் நியமித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களாக இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவர் 8ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினார்.
19ஆவது திருத்த சட்டத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் ஆகும்.
எனவே மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா? அல்லது முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? என்கிற விடயத்தை ஆராயும் நோக்கில் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி நேற்று ஆலோசனை கோரியிருந்தார்.