ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டு5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான சுற்றறிக்கையின் முழு விபரம்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான சுற்றறிக்கையின் முழு விபரம்

0Shares

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டயாம் அல்ல என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வருமானத்திலும் பார்க்க குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளின் குடும்பங்களில் கற்றலுக்கு ஆற்றல் கொண்ட பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்காகவும் பாடசாலைகளில் தரம் 5 இற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காகவும் தரம் 5 புலமை பரிசில்க்கான பரீட்சை வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இருப்பினும் தற்பொழுது இந்த அடிப்படை நோக்கத்துக்கு அப்பால் புலமைப் பரிசில் பரீட்சை ஊடாக புலமை ஆற்றல் மற்றும் அறிவு வளர்ச்சியில் முரண்பாடுகளை கவனத்தில் கொள்ளாது சிறு பிள்ளைகளின் மனதிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற போட்டியாக உருவெடுத்திருப்பதாக சிறுவர் உளவியல் வைத்திய துறை விசேட வைத்தியர்கள் உள்ளிட்டோரின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளில் புலமைப் பரிசை பெற்று கொள்ள வேண்டிய குடும்பங்களிலும் பார்க்க பொதுவான தேசிய பாடசாலை மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகுவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்களை கொண்டு எதிர்காலத்தில் புலமை பரிசிற்கு தகுதியை பெறும் வருமான வரையறைக்கு உட்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளின் குடும்ப மாணவர்களை தவிர ஏனைய அனைத்து மாணவர்கள் அந்த பரீட்சைக்கு சமர்பிப்பது கட்டாயம் அல்ல என்றும் இதற்காக எந்த வகையிலும் மாணவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படக் கூடாது என இது தொடர்பாக வெளியிடப்படும் 08/ 2019 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாணவர்கள் விருப்பத்துக்கு அமைய பெற்றோரின் விருப்பத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதா இல்லையா குறித்து என்பது தீர்மானினக்கப்படும்.

சில சந்தர்ப்பத்தில் தரம் 5 நிறைவு செய்யும் ஆரம்ப பாடசாலை ஒருவருக்கு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றாதா சந்தர்ப்பத்தில் அவருக்கு ஆரம்ப பாடசாலை ஒன்றை பெற்றுக் கொடுக்கும் அதிகாரம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தரம் 5 புலமை பரசில் பரீட்சையில் பெறுபேறை அடிப்படையாக கொண்டு போட்டி தன்மையை அதிகரிக்கும் வகையில் பதாதை போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்று இந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை சித்தி எய்திய சித்தி அடையாத பிள்ளைகளாக வேறுபடுத்தும் பிளவுக்குள் சிறு பிள்ளைகள் பாரிய அளவில் உளவியல் ரீதியிலான நெருக்கடிக்கு உள்ளாகுவதாகவும் அவர்களது மனநிலை அபிவிருத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புலமை பரிசில் தொடர்பான மதிப்பீட்டு குழு ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 

பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களை உள்வாங்கும் பொழுது சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை ஆலோசனைக்கமைய வசதிகள் மற்றும் சேவை கட்டண பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் போன்ற அங்கீகரிக்கப்பட கட்டணங்களை தவிர்ந்த ஏனைய நிதி உதவி வசூலிப்பது அல்லது ஏனைய நன்கொடைகளை பெற்றுக் கொள்வது தடையாகும் என்றும் சுற்று நிருபனத்தில் சுட்டிகாட்டப்படடுள்ளது. இது சில பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்த பெற்று வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் முறைக்கேடாக பணம் வசூலிக்கப்படுவதாக முறைக்குகேடு கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. 

புலமைப் பரசில் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி புலமைப் பரிசில் பரீட்சையில் மீண்டும் மதிப்பீடு செய்து அதற்காக பொருத்தமான மாற்று பரிந்துரையை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட புலமைப் பரசில் மீளாய்வு குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இருப்பினும் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு இந்த குழு இன்னும் எட்டவில்லை என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக பிரிவு சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments