ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுகட்­டு­நா­யக்க- கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படும்.!

கட்­டு­நா­யக்க- கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படும்.!

0Shares

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில்,  களனி பாலம் அருகில்,  களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இம்­மாதம் 10 ஆம் திகதி முதல் மூடப்­ப­ட­வுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக  இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது.

அதன்­படி எதிர்­வரும் 10 ஆம் திகதி முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் பாதையை பயன்­ப­டுத்தி A 1 கொழும்பு – கண்டி பிர­தான வீதிக்குள் நுழைய வேண்டும்.

அதேபோன்று  அதி­வேக பாதையில் இருந்து வத்­தளை, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்கு வெளி­யேறி செல்­வ­தற்­கா­கவும் பேலி­ய­கொடை வெளி­யேறல் பாதையைப் பயன்­ப­டுத்தி கொழும்பு – நீர்­கொ­ழும்பு A3 வீதிக்குச் சென்று பய­ணிக்க வேண்டும்.

எனினும் கட்­டு­நா­யக்க அதி­வேக பாதையில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்க வழமை போன்றே  செல்ல முடியும் எனவும்  இந்த அறி­வு­றுத்­தல்­களின் பிர­காரம் எதிர்­வரும் 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை சாரதிகள் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments