சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். அனைவருக்கும் எழில்மிகு மற்றும் அர்த்தம் பொருந்திய நத்தார் தினமாகஅமையவேண்டுமெனஎனவாழ்த்துகிறேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமாதானம் மற்றும் அன்பின் சுப செய்தியுடன் தேவபுத்திரர் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவமக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடும் ஓர் சமயவைபவமாகும்.தற்போதுஅதுகிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன,மதபேதமின்றிபெரும்பாலானஉலகமக்கள் கொண்டாடும் கலாசாரநிகழ்வாகவும் மாறியுள்ளது.
ரோம வல்லரசின் சமூக,பொருளாதாரமுறைமையினுள் மக்கள் இன்னல்களைஅனுபவித்துக் கொண்டிருந்தகாலப்பகுதியில் இயேசுநாதர் மாட்டுத் தொட்டிலில்,ஏழைப்பெற்றோருக்குமகனாப் பிறக்கிறார்.
அவர் பௌதீக,மானசீக,ஆன்மீகவறுமையிலிருந்து,அடக்குமுறையிலிருந்துமீள்வதற்காக அன்பு,ஆதரவு,கருணைமிகுந்தசிறந்தசமூகமொன்றைஉருவாக்குவதற்காகதனது முழு வாழ்வையும்அர்ப்பணித்தார்.
இன,மதபேதங்களைத் தாண்டிய,சமாதானம்,நல்லிணக்கம் மிகுந்த,நற்பண்புகள் நிறைந்தசிறந்த சூழலொன்றையும்சட்டம்,சமாதானம்,நீதி என்பனஆதிக்கம் செலுத்தும் சிறப்பானதோர் தேசத்தையுமே இன்றுஎமதுசமூகமும் வேண்டிநிற்கிறது.
நல்லமனிதன் தனதுஉள்ளத்தில் மறைத்துவைத்துள்ளநல்லஅம்சங்களையும்,கெட்டமனிதன் தனதுஉள்ளத்தில் மறைத்துவைத்துள்ளகெட்டஅம்சங்களையும் வெளிப்படுத்துவதாகபுனிதபைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேநல்லஅம்சங்களினால் நமதுஉள்ளங்களைநிரப்பி,சிறந்தமனிதர்களாகசமூகத்தைவளப்படுத்;துவதனையேநாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
சமாதானத்தின் குமாரர் எனஅழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்புநிகழ்ந்தநத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவேஇந்தநத்தார் தினத்தைஅர்த்தமுள்ளதாகமாற்றியமைக்கமுடியும். உங்கள் அனைவருக்கும் எழில்மிகுமற்றும் அர்த்தம் பொருந்தியநத்தார் தினமாகஅமையவேண்டுமெனஎனவாழ்த்துகிறேன்.