ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கில் என்ன நடந்தது உயர்நீதிமன்றத்தில்

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கில் என்ன நடந்தது உயர்நீதிமன்றத்தில்

0Shares

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவானது, குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து, எதிர்வரும் திங்கட்கிழமைவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும்,இன்றைய மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வெளியிடப்படும் திகதி உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்படவில்லை என எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தின் முன்னிலையில் இன்று நான்காவது தினமாகவும் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றன.

இன்றைய தினம் விசாரணைகள் ஆரம்பமான போது, இடையீட்டு தரப்பினர்கள் சார்பில் தொடர்ந்தும் சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது, முதலில் சமர்ப்பனங்களை முன்வைத்த சட்டத்தரணி க்ரிஷ்மால் வர்ணசூரிய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் குறைப்பதற்கு தகைமை இல்லையென குறிப்பிட்டார்.

இதையடுத்து, மேலும் சில சட்டத்தரணிகள் இடையீட்டு தரப்பினர் சார்ப்பில் சமர்ப்பனங்களை முன்வைத்தனர்.

இறுதியில், இடையீட்டுத் தரப்பினர்களாக முன்னிலையான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களை முன்வைத்தனர்.

அதன் பின்னர், மனுதாரர்கள் மீண்டும் பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது, இடையீட்டுத் தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட தர்க்கங்களுக்கு, மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் பதிலளித்தனர்.

இதற்கமைய, சட்டமா அதிபரினால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட சமர்ப்பனம் தொடர்பில் முதலாவது மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தமது பதில் தர்க்கத்தை முன்வைத்தார்.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மனுவின் ஊடாக சவாலுக்கு உட்படுத்த முடியாதென சட்டமா அதிபர் தமது சமர்ப்பனத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து பதில் தர்க்கம் முன்வைத்த மனுதாரர் தரப்பினர், அரசியல் அமைப்பின் 35 ஆவது சரத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அதிகாரம் நீக்கப்பட்டு, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நிறைவேற்று செயற்பாடுகளை அடிப்படை உரிமை மனுவின் ஊடாக சவாலுக்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய, அரசியல் அமைப்பின் 35 ஆவது சரத்தின் பிரகாரம் பிரஜை ஒருவருக்கு ஜனாதிபதியின் எந்தவொரு நிறைவேற்று செயற்பாட்டையும் சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுவை தாக்கல்செய்யும் தகைமை உள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனூடாக அரசியல் அமைப்பின் 33 ஆம் சரத்தின் 2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, நாடாளுமன்றத்தை கலைத்ததன் ஊடாக ஜனாதிபதி மேற்கொண்டது நிறைவேற்று செயற்பாடே என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம், இடையீட்டு தரப்பினரால், முன்னதாக அரசியல் அமைப்பின் 62 ஆம் சரத்தின் 2 ஆவது பிரிவிற்கு அமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டாலும், நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், 70 ஆவது சரத்தில் நான்கரை வருடங்கள் பூர்த்தியடையும்வரை ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும் குறிப்பிடப்படுவதாக அவர்கள் தர்க்கம் முன்வைத்துள்ளனர்.

அரசியல் அமைப்பின் 73 ஆவது சரத்தின் 3 பிரிவில் நாடாளுமன்றத்தின் காலம் நிறைவடையும் போது, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அது நடைபெற வேண்டும் என்றும் இதற்கமைய நான்கரை வருடங்கள் பூர்த்தியடையும் வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியாதென்றும் அவர்கள் தர்க்கம் முன்வைத்துள்ளனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments