நீர்கொழும்பு வெலிஹேன ரொமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா கடந்த புதன்கிழமை (28-11-2018) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அருட் தந்தை ரொஹான் பீரிஸ், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
அருட் சகோதரி ஹேன் மேரி, அருட் சகோதரி குளொடில்டா பெர்னாந்து புள்ளே மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிறிஸ்மஸ் செய்தியை அருட் தந்தை ரொஹான் பீரிஸ் நிகழ்த்தினார். கரோல் கீதம், நடனம், நாடகம் உட்பட பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்வில் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் விசேட உரை நிகழ்த்தினார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்தார். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை நலன் விரும்பி ஒருவரினால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை செல்வி துன்யா, ஆசிரியர் பிலீசியன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். உதவி அதிபர் திருமதி ஏ.இ.கே. பெர்னாந்து புள்ளே நன்றி உரை நிகழ்த்தினார்.