ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுசாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.!

சாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.!

0Shares

கொழும்பு, தலங்­கம பிர­தே­சத்தில் விளை­யாட்­டுக்­காக மோட்டார் சைக்கிள் ஓட்­டிய இரு இளை­ஞர்கள் விபத்­தொன்றில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

குறித்த சம்­பவம்  நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ள­தாக தலங்கம பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அக்­கு­ரே­கொ­டையில் இருந்து டென்சில் கொப்­பே­க­டுவ வீதி வரை மோட்டார் சைக்­கிளை ஓட்­டிய இரு­வரும் குறுக்கு வீதி ஒன்றில் மற்­று­மொரு வாக­னத்தை முந்திச் செல்ல முற்­பட்ட போது விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இதில் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

17 வய­தான சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே புலான் சஞ்­சய மற்றும் சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே தில்ஷான் ஆகிய இளை­ஞர்­களே மேற்படி சம்பவத்தில் உயி­ரி­ழந்­தவர்களாவர். உற­வி­னர்­க­ளான இந்த சகோ­த­ரர்கள் நேற்று முன்­தினம் சாதா­ரண தரப் பரீட்சை  நிறைவு பெற்ற மகிழ்ச்­சியில் நண்­பர்­க­ளுடன் மோட்டார் சைக்­கிளை ஓட்­டிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இதில் சம்­பவ இடத்தில் ஒரு இளைஞர் உயி­ரி­ழந்­த­துடன் மற்­றைய இளைஞர் கொஸ்­வத்தை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­ வந்­துள்­ளது.

தலங்­கம தெற்கு திடீர் மரண விசா­ரணை அதி­காரி மரண விசா­ர­ணை­களை மேற்­கொண்டார். சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்­காக தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கு­மாறு தலங்­கம பொலி­ஸா­ருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த இளைஞர்கள் இராஜ கிரிய ஜனாதிபதி கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments