ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான மடல் !

ஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான மடல் !

0Shares

நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நாடு பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை,  சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உள்ள கீர்த்தி மற்றும் நீண்ட அரசியல் வாழ்ககையினூடாக நீங்கள் தனிப்பட்ட ரீதியாக பெற்ற கௌரவம் இன்று ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறதென ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறுதியாக கலந்துரையாடல்களின் மூலம் தற்போது நிலவும் குழப்ப சூழலை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சிறந்த நல்லாட்சியின் கோட்பாட்டின் அடிப்படையில் 7 தசாப்த காலமாக உள்ள ஜனநாயக ராஜ்ஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எனவும் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் நேற்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

சபாநாயகருக்கான ஜனாதிபதியின் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“பாராளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் உங்களது செயற்பாடுகள் வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேணை முன்வைக்கப்பட வேண்டிய முறை தொடர்பாக அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளீர்கள்” என இரண்டு பக்க பதில் கடிதம் ஒன்றை ஜனாதிபதி சபாநாயகருக்கு நேற்று அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதில் கடிதத்திற்கு சபாநாயகர் 3 பக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“122 அமைச்சர்கள் அனுமதித்த ஆலோசனை உங்களால் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. குறித்த 122 அமைச்சர்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் உள்ளடங்குவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நீங்கள் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டது அன்று மக்கள் அளித்த வாக்கு வரம் மூலம் என்பதை நீங்கள் மறந்திருப்பது வருத்தத்தையளிக்கிறது.

உங்களோடு இணைந்து நாடு முழுவதுமாக 140 க்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்பை மேற்கொண்டு அவர்களிடம் வரம் பெற்றது உங்களை ஜனாதிபதியாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கும் என்பதை நினைவுப்படுத்துவது எனது கடமையாக கருதுகிறேன்.

அதன்படி அன்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியது அன்று ஆட்சியிலிருந்த பெரும்பான்மை அமைச்சர்களின் விருப்பின் பெயரிலேயே. ஆனால் இன்று பிரதமர் பதவி மாற்றம் அவ்வாறு நடக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

சபாநாயகர் கட்சி சார்பின்றி சுயாதீனமாக இயங்க வேண்டும் என நீங்கள் எனக்கு நினைவு கூர்ந்ததையிட்டு உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பாராளுமன்ற அமைச்சர்கள் 122 பேர் சார்பில் முன்னிற்பது மற்றும் பெரும்பான்மைக்கு செவி சாய்ப்பது கட்சி சார்பல்ல என்பது ஜனநாயக சமுதாயத்தின் தாற்பரியமாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சபாநாயகராக பொறுப்பேற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவிற்கு நான் அடி எடுத்து வைத்ததில்லை. அதேபோல் கட்சி நடவடிக்கைகளில் துளி அளவேனும் நான் பங்கு கொண்டதில்லை.

முன்னொரு தடவை எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு நான் அதிக நேரம் வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி எனக்கெதிராக குற்றஞ்சாட்டியதையும் எனக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு குற்றஞ்சாட்டியதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றம் தொடர்பாக அதிக அனுபவமுள்ளவர் நீங்கள். நான் நேற்று பாராளுமன்றில் செயற்பட்ட விதம் ஜனநாயகத்திற்கும் நிலையியற் கட்டளைகளுக்கு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என கூறுவதை கண்டு வியப்படைகிறேன்.

பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட முடியாது என்பதை உணர்ந்த புதிய அரசாங்காத்தின் அமைச்சர்கள் ஜனநாயகம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இடையூறு விளைவித்ததோடு சபையின் நடுவே வந்து செங்கோலை எடுத்துச் செல்ல முயற்சித்ததோடு மிக தாழ்வான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்தமை போன்ற செயற்பாடுகள் அமைச்சர் அங்கீகரம் பெற்றவர்கள் செய்வதற்கு கொஞ்சம் கூட தகுதியானவை அல்ல.

அவர்கள் வேண்டுமென்றே நிலையியற் கட்டளை தொடர்பான வாக்கெடுப்பை தடுத்த காட்சிகள் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் உங்களை தெளிவுபடுத்தும்.

நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 122 அமைச்சர்களும் பாராளுமன்றில் உள்ளவர்கள் என்பதோடு அவர்களில் சிலர் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களாவர்.

குறித்த வாக்கெடுப்பை முறையாக நடாத்திச் செல்ல ஆதரவளிக்குமாறு என்னால் 3 தடவைகள் சபையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு அவவர்கள் சந்தர்ப்பம் அளிக்காத பட்சத்திலேயே 47(1) நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக பெரும்பான்மை குரல்களுக்கு செவி சாய்த்து அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நாடு பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை,  சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உள்ள கீர்த்தி மற்றும் நீண்ட அரசியல் வாழ்ககையினூடாக நீங்கள் தனிப்பட்ட ரீதியாக பெற்ற கௌரவம் இன்று ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.

இதனால் இன்னும் காலம் தாழ்த்தாது பாராளுமன்றின் பெரும்பான்மைக்கு செவி சாய்த்து தேசத்தை வஞ்கசத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரஜைகள் மற்றும் அறிவாற்றல் மிக்க எதிர்காலம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது அழைப்பின் பேரில் கட்சித் தலைவர்களை இன்று காலை 8.30 மணிக்கு சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் குறித்த சந்திப்பினால் எது வித பிரயோசனமும் இல்லை என்ற கட்சி தலைவர்களின் கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இறுதியாக கலந்துரையாடல்களின் மூலம் தற்போது நிலவும் குழப்ப சூழலை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சிறந்த நல்லாட்சியின் கோட்பாட்டின் அடிப்படையில் 7 தசாப்த காலமாக உள்ள ஜனநாயக ராஜ்ஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என சபாநாயகர் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments