பாராளுமன்றத்தை மீண்டும் நாளை (16) கூட்டுவதற்கு தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மீண்டும் நாளை பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது