ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்த சபாநய அறிவித்தார்.
இந்நிலையில், நாளை கூடும் பாராளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.