ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பில் இரண்டு கோடி ரூபாய் பெருமதியான 2Kg ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவர் தொடர்பான...

நீர்கொழும்பில் இரண்டு கோடி ரூபாய் பெருமதியான 2Kg ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதானவர் தொடர்பான முழுமையான செய்தி(photos,video)

0Shares

25 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கிலோகிராம்(2.60Kg) ஹெரோயின் போதைப் பொருளுடன்  சந்தேக நபர் ஒருவரை  நீர்கொழும்பு பிராந்திய விஷ போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர்  கைது செய்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  ஊடகங்களுக்கு இன்று(7) தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (7) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

 நீர்கொழும்பு போருதொட்டை, தக்கியா வீதி,ஜய மாவத்தையில்  வசிக்கும் முஹம்மத் பாரூக் முஹம்மத் சித்தீக் ( 51 வயது)  என்பவரே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.

போருதொட்டை, தக்கியா வீதியில் ஜய மாவத்தையில் வைத்து சந்தேக நபர்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் போதைப் பொருளை இரண்டு பக்கற்றுக்களில்  துணியொன்றில் மறைத்து கைவசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிமிருந்து இரண்டு கிலோகிராம் 60 கிராம் நிறைகொண்ட போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸ் மா அதிபரின் கருத்திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி விஷ போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போதைப் பொருள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவே இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 1500 இற்கும் மேற்பட்ட தகவல் இந்த பிரிவிற்கு கிடைத்துள்ளது. இந்த பிரிவிற்கு  0113024820, 0113024848, 0113024850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு  பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். இந்த பிரிவு  விசேட நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான் போதைப் பொருள் தொடர்பான தகவல்  ஒன்று நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்தது. 25 மில்லியன் ரூபா பெறுமதியான  ஹெரோயின் போதைப் பொருளுடன்  சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பல வருட காலம் கட்டார் நாட்டில் சாரதியாக பணியாற்றிவிட்டு கடந்த வருடம் நாடு திரும்பியவராவார். சந்தேக நபரை ஏழு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக  இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளோம் என்றார்.

மேல் மாகாண  வடக்கு பிரிவுக்கு பொறுப்பான  பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டி. ஐ. தென்னக்கோனின் மேற்பார்வையின் கீழ்  நீர்கொழும்பு பிராந்திய  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துக்கோரல, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை. ஜி. ஆர். எம். ரிபாத், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உதயகுமார வுட்லர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பிராந்திய விஷ போதைப் பொருள் ஒழிப்புப்  பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் முழுமையான செய்திகளுக்கு கீழே உள்ள காணொளியை பார்க்கவும்

 

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments