தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் , சிகிச்சை பெற்று வந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்க இன்று பிற்பகல் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து, அர்ஜுன ரனத்துங்கவின் மெய்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள புகைப்படம் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல
https://www.youtube.com/watch?v=N76Q1n0R5J4