கையடக்க தொலைபேசி ஆப் மூலமாக தற்போது நாடளாவிய ரீதியில் வாடகை வாகனசேவைகளை வழங்கிவரும் பிக்மீ,ஊபர்(Pickme,Uber) போன்ற நிறுவனங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதக நீர்கொழும்பு சுற்றுலா துறை முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவித்து வருகின்றனர்.
நேற்றையதினம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய சுமார் 200க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிசராதிகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் அவர்களை சந்தித்து தமக்கு நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வலியுறுத்தினர்.
அப்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனைசெய்து நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் அவர்கள் தம்மிடம் தெரிவித்தாக முச்சக்கர வண்டி சாரதிகள் எமது ஊடகத்துக்கு தெரிவித்தனர்.