நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் தகவல் தொழிநுட்ப உயர்தரப்பிரிவு(2019) மாணவர்களால் உருவாக்கப்பட்ட நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் உத்தியோக பூர்வ வலைத்தளம்(website) பாடசாலை அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களால் உத்தியோகப்பூர்வமாக தொடக்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது கடந்த மாதம் 10ம் திகதி பாடசாலை அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்கள் தலைமையில் பாடசாலை பிராதன மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.K .சிவகுமார் (BIT,MSC,MBA,senior technical specialist in Pearson Lanka)அவர்களும்.
விஷேட பிரதம அதிதியாக திருமதி. ஹரீடா சரோஜனி விஜேசிங்க(Ast Director of Education in ICT,BSE,PGDE, in ICT) அவர்களும் கலந்துகொண்டனர்
இந் நிகழ்வில் நீர்கொழும்பின் பிரபல பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப உயர்தரப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையில் தகவல் தொழிநுட்ப அறிவு திறன் போட்டிகளும் இடம் பெற்றது.
மிகவும் சிறப்பாக வடிவமைக்க பட்டுள்ள நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் உத்தியோக பூர்வ வலைத்தளத்தை www.wijayaratnamhcc.lk எனும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
இதன் போது பாடசாலையின் கீதம் நவீன முறையில் இசைவடிவில் வெளியிடப்பட்டது.
நவீன காலதிற்கு ஏற்ப பாடசாலையின் உத்தியோக பூர்வ வலைத்தளத்தை உருவாகியுள்ள நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் தகவல் தொழிநுட்ப உயர்தரப்பிரிவு(2019) மாணவர்களுக்கு எமது ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.