வரலாற்றில் முக்கிய இடமான சிகிரியாவில் உள்ள பிதுரங்கல ராஜா மகா விஹாராயாவுக்கு சொந்தமான பிதுரங்கலா கல்லின் மேல் நின்று இளம் இளைஞர்களும் பெண்களும் தங்கள் நிர்வாணப் படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்..
இந்த புகைப்படங்கள் வணக்கஸ்தலமான சீகிரியாவின் பார்வைக்குள்ளேயே எடுக்கப்பட்டதால் சமூக ஊடகங்களில் வைரலாககின்றன. சீகிரியா மற்றும் பிதுரங்கலா ஆகியவைக்கான தூரம் சில கிலோமீட்டர்கலே ஆகும். அரிஹந்த் துறவிகளுக்காக பிதுரங்கலா மடாலயம் கட்டப்பட்டதாகவும், சிகிரியாவின் கட்டுமானத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு பதிலளித்த, பிதுரங்கல ராஜா மகா விஹாராயாவின் பிரதம அலுவலர், வண. டானியகம ஆனந்த தேரர் இவ்வாறான புகைப்பட ங்களை பேஸ்புக்கில் வெளியிடப்பட்டதால் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , இந்த உலக புகழ்பெற்ற இடத்தைப் பார்க்க வந்தவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது அவமானமாக இருக்கிறது. வரலாறு மற்றும் அறநெறி பற்றி அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் துறவியின் கூற்றுப்படி நடந்துகொள்ள முடியாது.
இந்த விஷயத்தில் சிகிரிய தொல்பொருள் அதிகாரியிடம் விசாரிக்க முயன்றபோது, அந்தப் பகுதியில் பொறுப்பாளராக எந்த தொல்பொருள் அதிகாரியும் இல்லை
என்பதால் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டிருப்பதாக அந்த அலுவலரின் அதிகாரி கூறினார். இருப்பினும், இக்குற்றம் சம்பந்தமான தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறினார்.
இந்நாட்களில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிரகிரியா மற்றும் சுற்றியுள்ள மத இடங்களில் பார்க்கலாம்
.