நீர்கொழும்பு கொச்சிகடை நகரில் இன்று மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே தலை சிதைந்து உயிரிழந்துள்ளார்.
உந்துருளியொன்று கொங்கிரீட் கலவை பாரவூர்தியில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த சுப்ரமணியம் றிஸ்மியா சபீர் என்ற 33 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் உந்துருளியை செலுத்தியுள்ள நிலையில் , அவரும் மற்றும் மூன்றரை வயது அவர்களது குழந்தையும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
உந்துருளி செலுத்துனரின் கவயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தி சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கொச்சிகடை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.