நாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறைகூவல் விடுத்துள்ளார்.
கூட்டு எதிரணியின் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்,
தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்கான நாட்டை மீட்ட இராணுவ வீரர்களைத் தொடர்ந்து வேட்டையாடும் வகையில் செயற்பட்டுவரும் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படைகளை முற்றிலும் சிதைக்கும் வகையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் விதமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.