20 கிலோகிரோம் நிறையுடைய தங்கங்கங்களுடன் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பிரஜை ஒருவரை கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சென்னை நகரில் இருந்து பயணித்துள்ள பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 20 கிலோகிரோம் நிறையுடைய தங்கங்களை தனது ஆடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கொண்டு வர முயற்சித்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்களின் பெறுமதியானது சுமார் 120 கோடி ரூபாவாகும் என தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.