ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு கொச்சிக்கடை நகரத்திற்கு 1000 மில்லியன் ரூபாய் செலவில் அதிநவீன வர்த்தக கட்டிடத்தொகுதி

நீர்கொழும்பு கொச்சிக்கடை நகரத்திற்கு 1000 மில்லியன் ரூபாய் செலவில் அதிநவீன வர்த்தக கட்டிடத்தொகுதி

0Shares

1000 மில்லியன் ரூபாய் செலவில் நீர்கொழும்பு கொச்சிக்கடை நகரத்தில் நீர்கொழும்பு மாநகர சபை உப அலுவலகத்துடன் கூடிய அதிநவீன  வர்த்தக கட்டிடத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு நீர்கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இத் திட்டம் தொடர்பான தகவல் நேற்று(28)  நீர்கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் வெளியானது.

மூன்று மாடிகளை கொண்ட குறிப்பிட்ட கட்டிடம்  130,000 சதுர அடியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் முதல் மாடியில் 50 கடைத்தொகுதிகளும் இரண்டாவது மாடியில் 25 கடைத்தொகுதிகளும் மூன்றாவது மாடியில் நீர்கொழும்பு மாநகர சபையின் கொச்சிக்கடை உப காரியாலயமும் அமைப்பதற்கு தீர்மானிக்கபட்டது.

இக்கூட்டத்திற்கு நீர்கொழும்பு  கொச்சிக்கடையில் தற்போது  உள்ள நகரசபை கடைகளின் உரிமையாளர்கள், நீர்கொழும்பு மாநகர முதல்வர் தயான் லான்ச, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, மேல் மாகாணசபை உறுப்பினர் M.S.M.சகவுல்லா,  நீர்கொழும்பு மாநகர சபை  துணை முதல்வர் M.A.S. பரீஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் குமார குணரத்ன,மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், கட்டிட வரைபட கலைஞ்ர்கள், பொறியாளர்கள், நீர்கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இத் திட்டமானது இதுவரையில் நீர்கொழும்பு மாநகர சபை சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments